Skip to main content

இந்திய மொபைல் மார்கெட்டை கலக்க வருகிறது ஜியோபோன் 5ஜி..

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஜியோபோன் 5ஜி ஆனது ரூ.9000 அல்லது ரூ.12,000-விலையில்அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 480 5ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

புதிய ஜியோபோன் 5ஜி மாடலில் 6.5-இன்ச் டிஸ்பிளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 1600×720 பிக்சல் தீர்மானம்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல் வெளிவரும். ஜியோபோன் 5ஜி மாடலில் 4ஜிபி ரேம் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவும்
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஜியோ நிறுவனம்.

ஜியோபோன் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஜியோபோன் 5ஜி மாடல். இந்த ஜியோபோன் 5ஜி மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி,கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் இந்தஸ்மார்ட்போன் வெளிவரும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

வெளியான முக்கிய தகவல் Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி;

புதுடெல்லி: இந்தியாவில் Ola Electric Scooter அறிமுகம் செய்யப்பட்ட பிறகுதான் இதற்கு வலுவான வரவேற்பு கிடைத்தது, சுமார் 4 மாதங்கள் காத்திருந்த பிறகு, தற்போது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப் போகிறார்கள். ட்விட்டரில் தகவல் அளித்துள்ள ஓலா எலக்ட்ரிக் CEO பவிஷ் அகர்வால், 2021 டிசம்பர் 15 முதல் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு வரத் தொடங்கும் என்று கூறியுள்ளார். நிறுவனம் அதன் விநியோகத்தை அக்டோபர் 25 முதல் தொடங்குவதாகவும் பின்னர் நவம்பர் 25 முதல் தொடங்குவதாகவும் கூறியது. Ola S1 இன் ஆரம்ப விலை ரூ. 1 லட்சமாகும், S1 Pro ரூ.1.30 லட்சமாகும். S1 ப்ரோ ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிமீ வரை இயக்க முடியும் ஓலா (Ola) எலக்ட்ரிக் இந்த ஸ்கூட்டரை S1 மற்றும் S1 ப்ரோ என இரண்டு வகைகளில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றில், 2.98 kWh பேட்டரி பேக்குடன் S1 வந்துள்ள நிலையில், S1 Pro 3.97 kWh பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டுள்ளது. S1-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ வரை இயக்க முடியும் மற்றும் S1 ப்ரோவை ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிமீ வரை இயக்க முடியும். உலகின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வ...

சேல்ஸ் ஆகாத கார்களை டீலர்கள் என்ன செய்யறாங்க தெரியுமா? செம ட்ரிக்ஸ்! கம்பெனிகிட்ட திருப்பி குடுக்க முடியாது...

விற்பனையாகாமல் இருக்கும் பழைய கார்களை டீலர்ஷிப்கள் என்ன செய்கின்றன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். இன்றைய கால கட்டத்தில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே கார்களில் தொடர்ச்சியாக புதுப்புது அப்டேட்கள் செய்யப்படுகின்றன. ஒரு மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மிக குறுகிய காலத்திலேயே புதிய அப்டேட்களுடன் அடுத்த மாடல் விற்பனைக்கு வந்து விடுகிறது. இதன் காரணமாக பழைய மாடல்களை விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. அப்படியிருக்கும்போது விற்பனையாகாத கார்களை டீலர்ஷிப்கள் என்ன செய்கின்றன? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. அந்த சந்தேகத்தை இந்த செய்தியில் நிவர்த்தி செய்கிறோம். நீங்கள் ஷோரூமிற்கு சென்றால், பல்வேறு புதிய கார்கள் வரிசைகட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். ஒருவேளை இந்த கார்கள் விற்பனையாகாவிட்டால், டீலர்ஷிப்களுக்கு சிக்கல்தான். ஏனெனில் டீலர்ஷிப்களுக்கு இதன் காரணமாக நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் புதிய கார்கள் விற்பனைக்கு வரும்போது அவற்றை நிறுத்துவதற்கு இடமும் இருக்காது. எனவே ஸ்டாக்கில் உள்ள பழைய கார்கள் அனைத்...

நீங்கள் விண்டோஸ் 11 க்கு மேம்படுத்த வேண்டுமா? விடுபட்ட விண்டோஸ் 10இன் அம்சங்களின் பட்டியல் இதோ:

விண்டோஸ் 11 இங்கே உள்ளது, இது இப்போது பெரும்பாலான பயனர்களுக்கு பரவலாகக் கிடைக்கிறது. Windows 11 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் Windows 10ஐத் தொடர்ந்து பயன்படுத்த மைக்ரோசாப்ட் பயனர்களை அனுமதிக்கிறது. எனவே நீங்கள் Windows 11 க்கு மேம்படுத்த வேண்டுமா அல்லது Windows 10 உடன் இணைந்திருக்க வேண்டுமா?  விண்டோஸ் 11 வெளியீட்டிற்கு முன், பயனர்கள் தங்கள் டெஸ்க்டாப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒரு பெரிய புதிய OS வெளியீட்டிற்கு புதுப்பிக்க வேண்டிய முக்கிய காரணம், புதிய மற்றும் அற்புதமான அம்சங்களை தொடர்ந்து அணுகுவதாகும். கூடுதலாக, வழக்கமான பாதுகாப்பு புதுப்பிப்புகளுக்கு ஒரு பெரிய புதிய OS க்கு புதுப்பித்தல் அவசியம். விண்டோஸ் 11 வெளியான போதிலும், குறைந்தபட்சம் 2025 வரை Windows 10 இலிருந்து அம்சங்கள் அல்லது பாதுகாப்பு புதுப்பிப்புகளை எடுக்க Microsoft திட்டமிடவில்லை. Windows 11 பதிப்பு 21H2 க்கு மேம்படுத்த முடியாத அல்லது விரும்பாத பழைய சாதனங்களுக்கு பாதுகாப்பு புதுப்பிப்புகளை Microsoft வெளியிடும்.  புதுப்பிப்புத் தேர்வைப் பற்றி நீங்கள் குழப்பமடைந்தால், இந்த வழிகாட்டி நீங்கள் Windows...