Skip to main content

வெளியான முக்கிய தகவல் Ola எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெலிவரி;

புதுடெல்லி: இந்தியாவில் Ola Electric Scooter அறிமுகம் செய்யப்பட்ட பிறகுதான் இதற்கு வலுவான வரவேற்பு கிடைத்தது, சுமார் 4 மாதங்கள் காத்திருந்த பிறகு, தற்போது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப் போகிறார்கள். ட்விட்டரில் தகவல் அளித்துள்ள ஓலா எலக்ட்ரிக் CEO பவிஷ் அகர்வால், 2021 டிசம்பர் 15 முதல் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு வரத் தொடங்கும் என்று கூறியுள்ளார். நிறுவனம் அதன் விநியோகத்தை அக்டோபர் 25 முதல் தொடங்குவதாகவும் பின்னர் நவம்பர் 25 முதல் தொடங்குவதாகவும் கூறியது. Ola S1 இன் ஆரம்ப விலை ரூ. 1 லட்சமாகும், S1 Pro ரூ.1.30 லட்சமாகும்.
S1 ப்ரோ ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிமீ வரை இயக்க முடியும் ஓலா (Ola) எலக்ட்ரிக் இந்த ஸ்கூட்டரை S1 மற்றும் S1 ப்ரோ என இரண்டு வகைகளில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றில், 2.98 kWh பேட்டரி பேக்குடன் S1 வந்துள்ள நிலையில், S1 Pro 3.97 kWh பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டுள்ளது. S1-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ வரை இயக்க முடியும் மற்றும் S1 ப்ரோவை ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிமீ வரை இயக்க முடியும். உலகின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகன உற்பத்தி ஆலை இந்த இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் தமிழகத்தில் சென்னைக்கு அருகில் உள்ள ஓலா எலக்ட்ரிக் (Electric vehicle) ஆலையில் தயாரிக்கப்படுகின்றன. நிறுவனம் அதே வளாகத்தில் புதிய ஹைப்பர்சார்ஜரை நிறுவியுள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாடு முழுவதும் உள்ள 400 நகரங்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் மற்றும் டச் பாயின்ட்களில் ஹைப்பர்சார்ஜர்கள் நிறுவப்படும் என்று ஓலா எலக்ட்ரிக் சில காலத்திற்கு முன்பு உறுதியளித்தது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த ஆலையானது உலகின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகன உற்பத்தி ஆலையாக மாற உள்ளது, தற்போது அதன் கட்டுப்பாட்டை முழுவதுமாக பெண்களே கையாள்கின்றனர். உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Comments

Popular posts from this blog

சேல்ஸ் ஆகாத கார்களை டீலர்கள் என்ன செய்யறாங்க தெரியுமா? செம ட்ரிக்ஸ்! கம்பெனிகிட்ட திருப்பி குடுக்க முடியாது...

விற்பனையாகாமல் இருக்கும் பழைய கார்களை டீலர்ஷிப்கள் என்ன செய்கின்றன? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். இன்றைய கால கட்டத்தில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே கார்களில் தொடர்ச்சியாக புதுப்புது அப்டேட்கள் செய்யப்படுகின்றன. ஒரு மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மிக குறுகிய காலத்திலேயே புதிய அப்டேட்களுடன் அடுத்த மாடல் விற்பனைக்கு வந்து விடுகிறது. இதன் காரணமாக பழைய மாடல்களை விற்பனை செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது. அப்படியிருக்கும்போது விற்பனையாகாத கார்களை டீலர்ஷிப்கள் என்ன செய்கின்றன? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. அந்த சந்தேகத்தை இந்த செய்தியில் நிவர்த்தி செய்கிறோம். நீங்கள் ஷோரூமிற்கு சென்றால், பல்வேறு புதிய கார்கள் வரிசைகட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். ஒருவேளை இந்த கார்கள் விற்பனையாகாவிட்டால், டீலர்ஷிப்களுக்கு சிக்கல்தான். ஏனெனில் டீலர்ஷிப்களுக்கு இதன் காரணமாக நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் புதிய கார்கள் விற்பனைக்கு வரும்போது அவற்றை நிறுத்துவதற்கு இடமும் இருக்காது. எனவே ஸ்டாக்கில் உள்ள பழைய கார்கள் அனைத்...

நீங்கள் விண்டோஸ் 11 க்கு மேம்படுத்த வேண்டுமா? விடுபட்ட விண்டோஸ் 10இன் அம்சங்களின் பட்டியல் இதோ:

விண்டோஸ் 11 இங்கே உள்ளது, இது இப்போது பெரும்பாலான பயனர்களுக்கு பரவலாகக் கிடைக்கிறது. Windows 11 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும் Windows 10ஐத் தொடர்ந்து பயன்படுத்த மைக்ரோசாப்ட் பயனர்களை அனுமதிக்கிறது. எனவே நீங்கள் Windows 11 க்கு மேம்படுத்த வேண்டுமா அல்லது Windows 10 உடன் இணைந்திருக்க வேண்டுமா?  விண்டோஸ் 11 வெளியீட்டிற்கு முன், பயனர்கள் தங்கள் டெஸ்க்டாப் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒரு பெரிய புதிய OS வெளியீட்டிற்கு புதுப்பிக்க வேண்டிய முக்கிய காரணம், புதிய மற்றும் அற்புதமான அம்சங்களை தொடர்ந்து அணுகுவதாகும். கூடுதலாக, வழக்கமான பாதுகாப்பு புதுப்பிப்புகளுக்கு ஒரு பெரிய புதிய OS க்கு புதுப்பித்தல் அவசியம். விண்டோஸ் 11 வெளியான போதிலும், குறைந்தபட்சம் 2025 வரை Windows 10 இலிருந்து அம்சங்கள் அல்லது பாதுகாப்பு புதுப்பிப்புகளை எடுக்க Microsoft திட்டமிடவில்லை. Windows 11 பதிப்பு 21H2 க்கு மேம்படுத்த முடியாத அல்லது விரும்பாத பழைய சாதனங்களுக்கு பாதுகாப்பு புதுப்பிப்புகளை Microsoft வெளியிடும்.  புதுப்பிப்புத் தேர்வைப் பற்றி நீங்கள் குழப்பமடைந்தால், இந்த வழிகாட்டி நீங்கள் Windows...