புதுடெல்லி: இந்தியாவில் Ola Electric Scooter அறிமுகம் செய்யப்பட்ட பிறகுதான் இதற்கு வலுவான வரவேற்பு கிடைத்தது, சுமார் 4 மாதங்கள் காத்திருந்த பிறகு, தற்போது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப் போகிறார்கள். ட்விட்டரில் தகவல் அளித்துள்ள ஓலா எலக்ட்ரிக் CEO பவிஷ் அகர்வால், 2021 டிசம்பர் 15 முதல் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு வரத் தொடங்கும் என்று கூறியுள்ளார். நிறுவனம் அதன் விநியோகத்தை அக்டோபர் 25 முதல் தொடங்குவதாகவும் பின்னர் நவம்பர் 25 முதல் தொடங்குவதாகவும் கூறியது. Ola S1 இன் ஆரம்ப விலை ரூ. 1 லட்சமாகும், S1 Pro ரூ.1.30 லட்சமாகும். S1 ப்ரோ ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிமீ வரை இயக்க முடியும் ஓலா (Ola) எலக்ட்ரிக் இந்த ஸ்கூட்டரை S1 மற்றும் S1 ப்ரோ என இரண்டு வகைகளில் அறிமுகம் செய்துள்ளது. இவற்றில், 2.98 kWh பேட்டரி பேக்குடன் S1 வந்துள்ள நிலையில், S1 Pro 3.97 kWh பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டுள்ளது. S1-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ வரை இயக்க முடியும் மற்றும் S1 ப்ரோவை ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிமீ வரை இயக்க முடியும். உலகின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வ...